சேப்டிராக்கைப் பற்றி எப்படி பயன்படுத்துவது? பதிவு செய்தல் கேள்வி பதில் ஆய்வுகள்

சேப்டிராக் - உங்களது ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பு

‌சேப்டிராக்கிற்கு உங்களை வரவேற்கிறோம்! சேப்டிராக் என்பது மேம்பட்ட ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பு வழங்கும் ஒரு இலவச கைப்பேசி பயன்பாட்டு மென்பொருளாகும். உங்களது பயணத்தை தன்னிச்சையான முறையில் கண்காணிக்கவும் பின்தொடரவும் சேப்டிராக் அனுமதிக்கிறது. ஒரு விசையை அழுத்துவதன் மூலம், ஏதேனும் ஆபத்து அல்லது அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் எச்சரிக்கை சமிஞ்ஞையை ஏற்படுத்த முடியும் ‌மேலும் உங்களுக்கான அவசரக்கால தொடர்பு எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பது தெரிந்ததாலும், அது தொடர்ச்சியாக பின்தொடர்வதாலும், உதவி வெகுதூரத்தில் இல்லை! சேப்டிராக்குடன், நீங்கள் எப்போதும் தனியாக இருப்பதில்லை மேலும் உங்களது பயணம் எப்போதும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் உள்ளது!

க்ருதிலேப்ஸ் தனது சமுதாய சேவை அறக்கட்டளையான, லோக்காலெக்ஸ் மூலமாக ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்புத் தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த சமூக முன்முயற்சியை உருவாக்கியுள்ளது. சேப்டிராக் மிகவும் எளிமையான மற்றும் பயன்படுத்துவதற்கு மிகவும் சௌகரியமான முறையாகும். இந்த பயன்பாட்டு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்வது மற்றும் நிறுவுவது மிகவும் சுலபமானதாகும்.

சேப்டிராக் பயன்பாட்டு மென்பொருள் தற்போது ஆன்டிராய்டு மற்றும் அடிப்படை கைபேசிகளிலும் கிடைக்கிறது! ஜாவா மென்பொருளை ஏற்கக்கூடிய பெரும்பாலான அடிப்படை கைபேசிகளில் தற்போது சேப்டிராக்கை நிறுவ முடியும்! அதனை மற்ற தளங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்களிடம் ஒரு ஆன்டிராய்டு கைபேசி இருந்தால், நீங்கள் அதனை இந்த இணையத்தில் பதிவு செய்து கொண்டு கூகுள் ப்ளே ஸ்டோர் மூ‌லமாக இந்த இலவச சேப்டிராக் பயன்பாட்டு மென்பொருளை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒருவேளை ஜாவா மென்பொருளை ஏற்கக்கூடிய ஒரு கைபேசி உங்களிடம் இருந்தால், இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான இணையத் தொடர்பு நீங்கள் பதிவு செய்த பின்னர் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த முயற்சிக்கு ஆதரவளித்தல்