விதிமுறைகளும் வரையறைகளும்


இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னால் கீழ்கண்ட விதிமுறைகள் மற்றும் வரையறைகளை கவனமாக வாசிக்கவும்.

இந்த இணையதளத்தைப் பார்ப்பது மற்றும் பயன்படுத்துவதில் கீழ்கண்ட விதிமுறைகள் மற்றும் வரையறைகள் மற்றும் இதர சம்மந்தப்பட்ட சட்டங்கள் பொருந்தும் என்பதை பயன்படுத்தும் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். நீங்கள் இந்த விதிமுறைகள் மற்றும் வரையறைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இந்த இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டாம்.

நிராகரிப்பு: நீங்கள் உருவாக்கும் தனிமைப்பாதுகாப்பு கொள்கை முழுமையானதாகவும், துல்லியமானதாகவும் மேலும் உங்கள் நிறுவனத்தின் குறிப்பிட்ட தனிமைப் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதை உறுதி செய்வது உங்களது பொறுப்பாகும். எங்களது சேவைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் தனிமைப் பாதுகாப்புக் கொள்கைகள் எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல, மேலும் எங்களது சேவைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் தனிமைப்பாதுகாப்புக் கொள்கைகள் முழுமையானவை, துல்லியமானவை மற்றும் தவறுகள் ஏதும் அற்றவை என்ற எந்தவிதமான வெளிப்படையான அல்லது மறைமுகமான கருத்துக்கள் அல்லது உறுதிமொழிகளையும் நாங்கள் அளிக்கவில்லை.

kritilabs.com என்பது ஒரு குடும்பத்தினருக்கு ஏற்ற இணையதளமாகும், மேலும் இதில் நாங்கள் சூதாட்டம், ஆபாசமான அம்சங்கள் (ஆபாசங்கள், மறைமுக ஆபாசங்கள், பெரியவர்களுக்கு மட்டுமேயான விளம்பரங்கள்), மருந்தகங்கள் (மலிவுவிலை மருந்துகள், வயாகிரா, ஆண்/பெண் உறுப்பை பெரிதாக்கும் மருந்து போன்றவை), வெறுப்புணர்வை பரப்புவது, இணைய சங்கிலித்தொடர்புகள் அல்லது ஸ்பேம் இணையதளங்கள் போன்ற இணையங்களை எங்களது திட்டத்திற்குள் ஏற்றுக் கொள்வதும் இல்லை அல்லது அனுமதிப்பதும் இல்லை. நீங்கள் இதுமாதிரியான ஏதாவது பொருட்களை விற்பனை செய்கிறீர்கள் என்று தெரிந்தால், நாங்கள் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் உங்களை உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கிவிடுவோம். எந்த ஒரு உறுப்பினரையும் மறுத்தால் அல்லது நீக்கினால் நாங்கள் அந்த முடிவுக்கு எந்த ஒரு காரணமும் சொல்லத் தேவையில்லை.

அறிவுசார்ந்த சொத்திற்கான காப்புரிமை:
இந்த இணையத்தில் உள்ள அனைத்து விஷயங்களும், அதன் வார்த்தைகள், படங்கள் அல்லது குறியீடு ஆகியவை உள்ளிட்ட, அவை மாத்திரம் அல்லாத அனைத்தும் இந்தியாவின் பிரத்யேக அறிவுசார்ந்த சொத்திற்கான காப்புரிமை சட்டங்களின் கீழ் kritilabs.com இணையத்தின் ஒருங்கிணைந்த பணியாக உரிமம் பெறப்பட்ட அதன் சொத்தாகும். இந்த ஒருங்கிணைந்த பணிகளில் kritilabs.com இணையத்தால் உரிமம் பெறப்பட்ட பணிகளும் அடங்கும். அனைத்து உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட்டன. kritilabs.com இணையத்திடம் பொருட்களுக்கான கோரிக்கையை முன்வைக்க அல்லது எங்களது பொருட்களை வாங்கும் நோக்கத்திற்காக மட்டும் இந்த இணையத்தில் உள்ளவற்றை மின்னணுப் பிரதிகள் எடுக்கவோ அல்லது அச்சிடவோ அனுமதி அளிக்கப்படுகிறது. இதில் உள்ளவற்றை மறுபிரதி எடுத்தல், விநியோகம் செய்தல், பார்வைக்கு வைத்தல், ஒளிபரப்புதல் போன்றவை மட்டுமல்லாமல் வேறு எந்தவிதமான செயல்களும் க்ருதிலேப்ஸ் அனுமதி பெறாமல் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் இருந்து தளவிறக்கம் செய்யும் எந்த ஒரு நோட்டிசிலும் உள்ள தகவல்களை மாற்றவோ அல்லது அகற்றவோ மாட்டோம் என்றும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இந்த இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள க்ருதிலேப்ஸ் அமைப்பின் வர்த்தக சின்னங்கள், சேவை சின்னங்கள், மற்றும் வணிகப் பெயர்கள் யாவும் க்ருதிலேப்ஸ் அமைப்பின் பிரத்யேகமான வர்த்தக சின்னங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட வர்த்தக சின்னங்களாகும்.

உத்திரவாத நிராகரிப்பு:
இந்த இணையதளம் மற்றும் இதில் பயன்படுத்தப்பட்ட விற்பனை செய்யப்படும் பொருட்கள் யாவும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான எந்த ஒரு உத்திரவாதங்களும் வழங்காமல் “எப்படி உள்ளதோ அப்படியே” என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றன. முடிந்தவரை தற்போதுள்ள சம்மந்தப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான மற்றும் ஒரு குறிப்பிட்ட செயலுக்கு இப்பொருட்கள் ஏற்றது என்பதற்கான மற்றும் எந்த விதிகளும் மீறப்படவில்லை என்பன மாத்திரம் அல்ல இது போன்ற எந்த விதமான வெளிப்படையான அல்லது மறைமுகமான உத்திரவாதத்தையும் க்ருதிலேப்ஸ் மறுக்கிறது. இந்த இணையளத்தில் உள்ள சேவைகள் யாவும் தடையில்லாமல் கிடைக்கும் என்றோ அல்லது தவறு இல்லாமல் இருக்கும் என்றோ, இதிலுள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றோ, அல்லது அந்த இணையதளத்தை காண்பிக்க உதவியாக இருக்கும் இணையம் அல்லது சர்வரில் எந்தவிதமான வைரஸ்கள் அல்லது இதர ஆபத்தான அம்சங்கள் இல்லை என்றோ க்ருதிலேப்ஸ் வாக்களிப்பதில்லை அல்லது உறுதியளிப்பதில்லை. இந்த இணையளத்தில் வழங்கப்படும் பொருட்களுக்கு அதன் சரியான தன்மை, துல்லியம், போதுமான நிலை, பயன், குறித்த காலத்தில் செயல்பாடு, நம்பகத்தன்மை மற்றும் இதர அம்சங்கள் குறித்து க்ருதிலேப்ஸ் எந்தவிதமான வாக்குகளையோ அல்லது உறுதிகளையோ அளிப்பதில்லை.

பொறுப்புகளில் உள்ள கட்டுப்பாடு:
இந்த இணையதளத்தில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தியதால், அல்லது பயன்படுத்த முடியாததல், அல்லது இந்த சேவைகள் மற்றும் பொருட்களின் செயல்பாட்டால் ஏற்படக்கூடிய சிறப்பு அல்லது விளைவுப் பாதிப்புகளுக்கு க்ருதிலேப்ஸ் பொறுப்பாகாது.

தட்டச்சுப் பிழைகள்:
ஒருவேளை ஏதாவது தவறுதலாக க்ருதிலேப்ஸின் பொருள் தவறான விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது என்றால், அவ்வாறு தவறான விலையில் பட்டியலிடப்பட்டுள்ள பொருளுக்கான கோரிக்கைகளை மறுக்கவோ அல்லது தடை செய்வதற்கோ க்ருதிலேப்சுக்கு அதிகாரம் உண்டு. உங்களது கோரிக்கை உறுதி செய்யப்பட்டிருந்தாலும் உங்களது கடன் அட்டையில் பணம் எடுக்கப்பட்டிருந்தாலும் அத்தகைய பொருளுக்கான கோரிக்கைகளை மறுக்கவோ அல்லது தடை செய்வதற்கோ க்ருதிலேப்சுக்கு அதிகாரம் உண்டு. நீங்கள் இந்த பொருள் வாங்கியதற்கு உங்களது கடன் அட்டையில் ஏற்கனவே பணம் எடுக்கப்பட்டிருந்து அந்த பொருளுக்கான உங்களது கோரிக்கை நிராகாரிக்கப்பட்டால், தவறுதலாக கொடுக்கப்பட்டிருந்த விலையின் அடிப்படையில் உள்ள தொகையை உங்களது கடன் அட்டைக் கணக்கிற்கு க்ருதிலேப்ஸ் திரும்பிச் செலத்திவிடும்.

விதிமுறை மற்றும் முடிவடைதல்:
நீங்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தும் போது மற்றும்/அல்லது பதிவு செய்தல் அல்லது வாங்கும் செயல்முறையைச் செய்து முடித்தவுடன் இந்த விதிமுறைகள் மற்றும் வரையறைகள் உங்களுக்குப் பொருந்தும். இந்த விதிமுறைகள் மற்றும் வரையறைகள் அல்லது அவற்றில் ஒருசில பகுதிகளை க்ருதிலேப்ஸ் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல், எந்த காரணத்திற்கு வேண்டுமானாலும் நிறுத்திவிடலாம். காப்புரிமைகள், வர்த்தக சின்னங்கள், நிராகரிப்பு, பொறுப்புகளில் கட்டுப்பாடு, இழப்புதொகை மற்றும் இதர அம்சங்கள் யாவும் எது நிறுத்தப்பட்டாலும் தொடர்ந்து அமலில் இருக்கும்.

நோட்டீஸ்:
க்ருதிலேப்ஸ் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக நோட்டீஸ் வழங்கலாம், இந்த இணையதளத்தின் வாயிலாக பொதுவான நோட்டீஸ் வழங்கலாம் அல்லது வேறு ஏதாவது நம்பகமான முறையில் நீங்கள் வழங்கியுள்ள முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.

மற்றவை:
நீங்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவது அனைத்து வகையிலும் இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாகும். க்ருதிலேப்ஸ் மற்றும் இதனைப் பயன்படுத்தியோருக்கு இடையிலான எந்த ஒரு பிரச்சனையைத் தீர்ப்பது சென்னையில் உள்ள நீதிமன்றத்தின் வரையறைக்குட்பட்டதாகும். இந்த இரண்டு தரப்பினருக்கிடையேயான உறவோ அல்லது வணிக முறைகளோ இந்த விதிமுறைகள் மற்றும் வரையறைகளை மாற்றாது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள தனது உரிமைகளை க்ருதிலேப்ஸ் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம்.

இணையதளத்தின் பயன்:
இந்த இணையதளத்தில் மின்னஞ்சல், இணைய உரையாடல் மூலமாகவோ அல்லது ஆபாசமான அல்லது மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஆகிய எந்த முறையிலாவது கொடுமைபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. க்ருதிலேப்ஸ் அல்லது அதன் பதிவு பெற்ற பணியாளர், விருந்தினர் அல்லது பிரதிநிதி அல்லது இதர அங்கத்தினர்கள் அல்லது பார்வையாளர் ஆகியோர் உள்பட மற்றவர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அசிங்கமான, அவதூறான, ஆபாசமான, மிரட்டக்கூடிய, தனிமையை அல்லது புகழின் உரிமையைப் பாதிக்கக்கூடிய, கஷ்டப்படுத்தக்கூடிய, சட்டத்திற்கு புறம்பான அல்லது வேறு ஏதாவது எதிர்ப்பு தொரிவிக்கக்கூடிய பொருட்களை இந்த இணைதளத்தில் பதிவேற்றம் செய்தாலோ, விநியோகம் அல்லது பிரசுரித்தாலோ, அல்லது ஒரு குற்றத்தை செய்தாலோ அல்லது ஊக்குவித்தாலோ, ஏதாவது தரப்பினாரின் உரிமைகளை மீறினாலோ அல்லது பொறுப்பினை மீறுவதாக அமையும் செயலையோ அல்லது சட்டத்தை மீறும் செயலைச் செய்யவோ கூடாது. நீங்கள் இந்த இணையதளத்தின் மூலமாக வேறு ஏதாவது தொழில் இணையதளங்களில் அல்லது இதர நிறுவனத்தில் சேரும்படியோ அல்லது அங்கத்தினர்கள் ஆகும்படியோ அழைப்பது கூடாது.

பங்கேற்பு நிராகரிப்பு:
க்ருதிலேப்ஸ் இந்த இணையதளத்தில் போடப்படும் அல்லது இதைப் பயன்படுத்துவோர் உருவாக்கும் தகவல்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் ஆய்வு செய்யாது மேலும் செய்ய முடியாது, மேலும் எந்த வகையிலும் இந்த தகவல்கள் மற்றும் பொருட்களுக்கு பொறுப்பாகாது. இந்த இணையதளத்தில் பயன்படுத்துவோரால் உருவாக்கப்பட்ட அம்சங்களை பார்ப்பது மற்றும் அதனை விநியோகம் செய்யும் ஆற்றலுடன் செயல்படுவதன் மூலம், அத்தகைய விநியோகத்தில் ஒரு சாதாரண ஊடகமாகத்தான் க்ருதிலேப்ஸ் செயல்படுகிறதே அன்றி இதிலுள்ள கருத்துக்கள் மற்றும் செயல்களுக்கு எந்த வகையான பொறுப்பையும் அது ஏற்காது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். எனினும் (அ)மோசமான, அவதூறான, அல்லது ஆபாசமான, (ஆ)ஏமாற்றும், வஞ்சகமான அல்லது தவறாக வழிநடத்தும், (இ)காப்புரிமை, வர்த்தக சின்னத்திற்கு எதிரான அல்லது; இதர பிரத்யேக காப்புரிமை உள்ளோருக்கு எதிராக உள்ள அல்லது (ஈ) க்ருதிலேப்ஸின் தனிப்பட்ட மதிப்பீட்டின்படி அதற்கு எதிரான அல்லது அதனால் ஏற்றுக் கொள்ள முடியாத தகவல் அல்லது பொருட்களை தடை செய்யும் அல்லது அகற்றும் உரிமை க்ருதிலேப்சுக்கு உண்டு.

இழப்பீடு:
இந்த விதிமுறைகள் மற்றும் வரையறைகள் ஏதாவது மீறப்படுவதாலோ அல்லது உங்களது கணக்கு சம்மந்தமான ஏதாவது செயல்களை நீங்கள் அல்லது இதர நபர்கள் உங்களது இணையதள இணைப்பைப் பயன்படுத்தி செய்வதாலோ ஏற்படக்கூடிய வக்கீலுக்கான குறிப்பிடும்படியான கட்டணம் உள்பட, இழப்புகள், செலவுகள், சேதங்கள் மற்றும் மதிப்பு ஆகியவற்றில் இருந்து க்ருதிலேப்ஸ், அதன் அலுவலர்கள், இயக்குநர்கள், பணியாளர்கள், முகவர்கள், உரிமம் பெற்றவர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் (ஒட்டுமொத்தமாக “சேவை வழங்குவோர்”) ஆகியோருக்கு விலக்கு அளித்து, அவர்களைப் பாதுகாத்து அவர்கள் ஆபத்தற்றவர்கள் என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.

மூன்றாம் - நபர் தொடர்புகள்:
நமது இணையதளத்தைப் பயன்படுத்துவோருக்கு மேம்பட்ட பலனைத் தருவதற்காக, க்ருதிலேப்ஸ் மூன்றாம் நபர்களால் நடத்தப்படும் இணையதளங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தலாம். எனினும், அந்த மூன்றாம் நபர்கள் க்ருதிலேப்ஸினால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்றாலும், அவர்களுக்கென்று பிரத்யேகமான தனிமைப் பாதுகாப்பு மற்றும் தகவல் சேகரிப்பு நடைமுறைகளைக் கொண்ட க்ருதிலேப்ஸில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இந்த இணையங்கள் மீது க்ருதிலேப்சுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. இதில் இணையத் தொடர்புகள் வழங்கப்பட்டுள்ள இணைதளங்கள் யாவும் உங்களது செளகரியத்திற்காகத்தான் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் நீங்கள் உங்களது சொந்த பொறுப்பில் தான் அந்த இணையதளங்களைப் பயன்படுத்துகிறீர்கள். அதுமட்டுமன்றி, க்ருதிலேப்ஸ் தனது இணையத்தின் மற்றும் தனது இணையத்தில் இணைக்கப்படும் பிற இணையத்தொடர்புகளின் நம்பகத்தன்மையை பாதுகாக்க விரும்புகிறது அதனால் அது தன்னுடைய இணையம் மாத்திரம் அல்ல அதில் கொடுக்கப்பட்டுள்ள பிற இணையத்தொடர்புகளைப் பற்றியும் உங்களது கருத்துக்களை (ஒரு குறிப்பிட்ட இணையத் தொடர்பு வேலை செய்வதில்லை என்பவை உள்பட) வரவேற்கிறது.