தனிமைப் பாதுகாப்புக் கொள்கை

இது (www.kritilabs.com ) க்ருதிலேப்ஸ் நிறுவனத்தின் இணையதளமாகும், இது பி11, மஹாதேவன் அப்பார்ட்மெண்ட்ஸ், 172 (பழையஎண்.305), டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா 600018 என்ற முகவாரியில் உள்ள க்ருதிலேப்ஸ் எல்.எல்.பி என்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. எங்களது இணையதளத்தினைப் பயன்படுத்துவோருக்கு நாங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான தகவல்களை சேகரிக்கிறோம். நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் எங்களது ஆய்வுக்கு மட்டுமே தவிர நாங்கள் அதனை மூன்றாம் நபர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அந்த தகவல்கள் கட்டாயம் பாதுகாக்கப்படும்.

நாங்கள் எங்களது பொருட்கள், மேம்பட்ட நிலைகள் மற்றும் சிறப்புச் சலுகைகள் ஆகியவை குறித்த தகவல்களை அவ்வப்போது மின்னஞ்சல் மூலமாக அனுப்புவோம். எதிர்காலத்தில் எங்களிடம் இருந்து எந்தவிதமான மின்னஞ்சலையும் பெற விரும்பவில்லை என்றால் ஒரு மின்னஞ்சலை அனுப்பி நீங்கள் அதனைத் தெரிவிக்கலாம். அவ்வப்போது நாங்கள் ஏற்கனவே நமது தனிமைப் பாதுகாப்புக் கொள்கையில் வெளியிடாத பயன்களுக்காக வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பயன்படுத்துவோம். நாம் தகவல் சேகரிக்கும் முறை இன்னும் கொஞ்சம் காலத்தில் மாற்றமடைந்தால், உங்களுக்கு அந்த மாற்றங்களைப் பற்றி தெரிவிக்க நாங்கள் அந்த மாற்றத்தை எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம், மேலும் அத்தகைய புதிய பயன்களில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளவும் நாங்கள் வாய்ப்பு வழங்குவோம். உங்களைப் பற்றிய தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படும் என்று நீங்கள் கவலைப்பட்டால், நீங்கள் அவ்வப்போது எங்களது இணையதளத்தைப் பார்க்க வேண்டும், அத்தகைய மாற்றங்களைப் பற்றி உங்களுக்குத் தகவல் தெரிவிக்க நாங்கள் அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் எங்களது இணையதளத்தில் போடுவோம் மேலும் நாங்கள் இந்த புதிய செயலுக்கு இந்த கொள்கை மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர் சேகரிக்கப்பட்ட தகவல்களைத்தான் பயன்படுத்துவோம். மேற்கண்ட முகவரியில் நமக்கு மின்னஞ்சல் எழுதியோ அல்லது மேற்கூறிய முகவரிக்கு கடிதம் எழுதியதன் மூலமாக அவர்கள் சேகரித்த காரணங்களைத் தவிர ஏனைய காரணங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் இந்த தகவல்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கலாம்.

இந்த இணையதளம் அது குறிப்பிட்ட தகவல் கொள்கையைப் பின்பற்றவில்லை என்று உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் மேற்கண்ட முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது மாநில அல்லது அந்தப் பகுதியில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.