சேப்டிராக்கைப் பற்றி எப்படி பயன்படுத்துவது? பதிவு செய்தல் கேள்வி பதில் ஆய்வுகள்

சேப்டிராக்கில் புதிய கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள்

சேப்டிராக் ஆரம்பிக்கப்பட்ட போது வெளிவந்த பிசினஸ் லைன் இதழின் கட்டுரை
Business Line Article

திருப்பூர் காவல் துறையுடன் ஒன்றாக இணைந்து சேப்டிராக்கை ஆரம்பித்த போது தி ஹிந்துவில் வெளிவந்த கட்டுரை
தி ஹிந்து கட்டுரை

திருப்பூர் காவல் துறையுடன் ஒன்றாக இணைந்து சேப்டிராக்கை ஆரம்பித்த போது சத்தியம் தொலைக்காட்சி சேனலில் சேப்டிராக்கைப் பற்றிய விரிவான செயல்விளக்கத்துடன் அளிக்கப்பட்ட செய்தித் தொகுப்பு
சத்தியம் தொலைக்காட்சி வீடி‌யோ

சேப்டிராக்கின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியான ‌நேர்காணல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி வீடியோ

சேப்டிராக்கைப் பற்றி தினமலர் தமிழ் நாளிதழில் வெளியான விரிவான கட்டுரை
தினமலர் கட்டுரை

பயன்படுத்தியோரின் ஆய்வுகள்

“பிஸ்னஸ் லைன் கட்டுரையின் மூலம் நான் சேப்டிராக் பற்றி தெரிந்து கொண்டேன். எனது மகள் மும்பையில் வேலை செய்கிறாள் மேலும் அவளது வேலையின் காரணமாக அவள் இரவு நேரத்தில் தாமதமாக மும்பையில் அரசு போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. நாங்கள் அவளைப் பற்றி மிகுந்த கவலையுடன் இருந்தோம். சேப்டிராக்குடன் தற்போது நாங்கள் மிகவும் பாதுகாப்பான உணர்வைப் பெற்றுள்ளோம். அவள் இரவு நேரத்தில் தாமதமாக பயணம் செய்யும்போது, அவள் எங்கு செல்கிறாள் என்பதை எப்போதும் கண்காணிக்க முடிவதால் நாங்கள் மிகவும் செளகாரியமாக உணர்கிறோம். மேலும், ஏதேனும் அவசர நிலை என்றால் அவளால் தனது நண்பர்களுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியும். இந்த பயன்பாட்டு மென்பொருள் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் மேலும் இந்த பயன்பாட்டு மென்பொருள் வசதி தற்போது சாதாரண கைபேசிகளிலும் உள்ளது என்பதை அறிய எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இது ஒரு சிறந்த முயற்சியாகும், மேலும் இது பல்வேறு மக்களுக்கு பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” - சந்திரசேகர், தொழில்முனைவோர், சென்னை.

“எனக்கு வயது 70, நான் கோயம்புத்தூரில் வாழ்கிறேன். நான் ஒரு இதய நோயாளி. இரண்டு வாரங்களுக்கு முன்பு நீங்கள் ஏதாவது பிரச்சனையில் இருக்கும்போது எப்படி அவசரக்கால செய்தியை அனுப்புவது என்பதை செய்தித்தாளில் (தினத்தந்தி) வாசித்தேன். அதே நேரத்தில் நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிவதும் எளிதாகிறது. இந்த செய்தியைப் பார்த்த போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் மேலும் இந்த முறையை முயற்சி செய்து பார்த்தேன். முதல் வேலையாக நான் என்னை உங்களது இணையதளத்தில் பதிவு செய்து கொண்டேன். நான் எனது தனிநபர் தகவல்களை கொடுத்தேன். உடனே அந்த மென்பொருளை தளவிறக்கம் செய்வதற்கான இணையத் தொடர்புடன் கூடிய ஒரு பதில் எனக்கு கிடைத்தது. நான் அந்த ஜார் அவணத்தை எனது கனிணித்திரையில் தளவிறக்கம் செய்தேன். நான் எனது கருவியில் (கைபேசி) இணையதளம் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்தினேன். நான் 2690 எண் கைபேசியை (அடிப்படை கைபேசி) வைத்துள்ளேன். நான் யூ.எஸ்.பியைப் பயன்படுத்தி அந்த ஜார் ஆவணத்தை எனது கனிணித் திரையில் இருந்து எனது கைபேசிக்கு மாற்றினேன். பரிசோதனை முறையில் நான் அவசரக்கால விசையை அழுத்தி சோதித்தேன் அப்போது நான் எனது தனிநபர் தகவலில் கொடுத்திருந்த கைபேசி எண்ணுக்கு (எனது மகனுடையது) குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தது”
- சேப்டிராக் பயன்படுத்துபவர், கோயம்புத்தூர்


நீங்கள் சேப்டிராக் பயன்பாட்டு மென்பொருளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களது ஆலோசனைகள்/கருத்துக்களை எங்களோடு “mailto:contact_safetrac@krithilabs.com” என்ற இந்த மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இந்த முயற்சிக்கு ஆதரவளித்தல்