சேப்டிராக்கைப் பற்றி எப்படி பயன்படுத்துவது? பதிவு செய்தல் கேள்வி பதில் ஆய்வுகள்

சேப்டிராக் - எளிமையானது மற்றும் சுலபமானது

இந்த சேப்டிராக் முறையைப் பயன்படுத்துவதற்கான முதல்நிலை இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு உங்களது பயன்பாட்டுக் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பெறுவதாகும். பதிவு செய்வதன் ஒரு பகுதியாக நீங்கள் தேவையான தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். வெற்றிகரமாக பதிவு செய்தவுடன் உங்களது கணக்கினை பயன்படுத்துவதற்குத் தேவையான இணையத் தொடர்பு கொண்ட ஒரு மின்னஞ்சலை நீங்கள் பெறுவீர்கள். அதை நீங்கள் செயல்படுத்திய பின்னர், இந்த பயன்பாட்டு மென்பொருளை தளவிறக்கம் செய்து அதை நிறுவுவதற்கான இணையத் தொடர்பு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பதிவு செய்த பின்னர், ஆன்டிராய்டு பயன்படுத்துவோர் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நேரடியாக இந்த பயன்பாட்டு மென்பொருளை நிறுவும் வசதி உள்ளது. சேப்டிராக்குடன் பதிவு செய்து கொள்வது, இதன் கண்காணிப்பு மற்றும் அவசரக்கால அம்சங்களை நீங்கள் பயன்படுத்தும் வாய்ப்பளிக்கும்.

ஜி.பி.எஸ் உள்ள கைபேசிகள்
உங்களிடம் ஜாவா மென்பொருளை ஆதரிக்கும் கைபேசி இருந்து அதில் ஜி.பி.எஸ் இருந்தால், அது ஒரு ஆன்டிராய்டு கைபேசியாக இருந்தால், சேப்டிராக்கில் உள்ள கண்காணிப்பு மற்றும் அவசரக்கால அம்சங்கள் ஆகிய இரண்டையும் பயன்படுத்த முடியும். அத்துடன், அவசரக்கால குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலில், நீங்கள் இருக்கும் இடமும் மிகவும் துல்லியமாக குறிப்பிடப்பட்டிருக்கும். உங்களது ஜி்.பி.எஸ் கைபேசியில் சேப்டிராக்கைப் பயன்படுத்த கீ‌ழ்கண்ட முறைகளைக் கடைபிடிக்கவும்:

- இந்த பயன்பாட்டு மென்பொருளை உங்களது கைபேசியில் நிறுவுவதற்கு முன்னால், அதன் ஜி.பி.எஸ் சேவை செயல் படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். சாதாரணமாக பொரும்பாலான ஆன்டிராய்டு கைபேசிகளில் ஜி.பி.எஸ் வசதி வை.பை, ப்ளு டூத், ஆட்டோ-ரொட்‌டேசன் ஆகியவை அமைந்துள்ள அதே விசையில்தான் அமைந்திருக்கும்.
- இந்த பயன்பாட்டு மென்பொருள் ஆரம்பித்தவுடன், இந்த பயன்பாட்டு மென்பொருள் ஜி.பி.எஸ் சேவையை செயல்பட வைத்து உங்களது இருப்பிடம் குறித்த தகவல்களை செர்வருக்கு அனுப்ப ஆரம்பிக்கும். இந்த பயணத்தைக் கண்காணிக்க வேண்டுமென்றால் உங்களது கைபேசியில் ‌இணையதள வசதி செயல்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் பதிவு செய்துள்ள பயனீட்டாளர் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி சேப்டிராக் இணையதளத்திற்குள் (www.safetrac.in) நுழையலாம். நீங்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் பயணத்தை பாதுகாப்பு கண்காணிப்புப் பகுதியில் தற்போது உள்ள நடைபெறுவது என்ற பட்டியலில் உங்களால் பார்க்க முடியும்.
- தற்போது நீங்கள் மேற்கொண்டிருக்கும் பயணத்தை பார்ப்பதற்கான தொடர்பில் நீங்கள் க்ளிக் செய்யும்போது ஒரு வரைபடம் தோன்றும். நீ்ங்கள் தற்போது இருக்கும் இடத்தை நீங்கள் பார்ப்பீர்கள் மேலும் உங்களது பயணத்தைக் காண்பிக்கும் வகையில் அந்த வரைபடம் தானாகவே புதுப்பித்துக் கொள்ளும். அதன் மூலம் உங்களது முழு பயணத்தையும் பாதுகாப்பாக பின்தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
- நீ்ங்கள் பாதுகாப்பில்லாமல் அல்லது பயமாக உணர்ந்தால், இந்த பயன்பாட்டு மென்பொருளில் உள்ள அவசரக்கால விசையை நீங்கள் செயல்படுத்தலாம். அந்த விசையை அழுத்தியவுடன், நீங்கள் பதிவு செய்துள்ள அவசரக்கால தொடர்புக்கு ஒரு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
- அந்த குறுஞ்செய்தியில் நீங்கள் இருக்கும் இடம் மிகவும் துல்லியமாக குறிப்பிடப் பட்டிருக்கும் (அப்போது உங்களது கைபேசியில் இணையதள வசதி செயல்படுத்தப்படாமல் இருந்தாலும் சரி)
- உங்களது பயணம் முடிந்தவுடன், அதிலிருந்து வெளியேறுவதற்கான விசையை அழுத்தியவுடன் அந்த பயன்பாட்டு மென்பொருள் உங்களை பின்தொடர்வதை நிறுத்தி விடும் மேலும் சேப்டிராக் இணையதளத்தில் உங்களது பயணம் பூர்த்தியானதாக குறிக்கப்படும்.

உங்களது கைபேசியில் இருந்து ஜி.பி.எஸ் பதிவுகள் கிடைக்கவில்லை என்றால், உங்களது வரைபடத்தின் மேல் பகுதியில் நீங்கள் ஒரு தகவலைப் பார்ப்பீர்கள் மேலும் உங்களது இருப்பிடம் காண்பிக்கப்பட மாட்டாது. இதற்கான முக்கியமான காரணங்கள் யாதெனில்:

- உங்களது கைபேசியில் உள்ள ஜி.பி.எஸ் செயல்படுத்தப்படாமல் இருக்கலாம்.
- ஜி.பி.எஸ் நிலைப்படுத்தப்படாமல் இருக்கலாம். பொதுவாக பெரும்பாலான கைபேசிகளில், தெளிவான வானம் காணப்படும் போது ஜி.பி.எஸ் நிலைப்படுத்தப்படுவதற்கு ஒருசில நிமிடங்கள் வரை நேரம் எடுக்கும்.
- உங்களது கைபேசியில் இணையதளம் செயல்படுத்தப்படவில்லை.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள செயல்விளக்க வீடியோக்கள் சேப்டிராக்கைப் பயன்படுத்துவதற்கான படிப்படியான விரிவான செயல்முறையை விளக்கும். :
                                                     

ஜி.பி.எஸ் இல்லாத கைபேசிகள்

- செயல்படுத்துவதற்கான மின்னஞ்சலில் உள்ள இணையதளத்திற்கான தொடர்பில் கிளிக் செய்து அதில் உள்ள மென்பொருளை உங்களது கனிணித்திரை / மடிக்கனிணி / கைபேசிக்கு தளவிறக்கம் செய்யுங்கள்.
- நீங்கள் அந்த மென்பொருளை உங்களது கனிணித்திரை / மடிக்கனிணிக்கு தளவிறக்கம் செய்திருந்தால், யூ.எஸ்.பி இணைப்பைப் பயன்படுத்தி அதனை உங்களது கைபேசிக்கு மாற்றுங்கள்.
- அதனை மாற்றிய பின்னர் பொதுவாக அந்த மென்பொருளை “பைல் மேனேஜர்” என்ற பகுதியில் நீங்கள் பார்ப்பீர்கள்.
- அதனை உங்களது கைபேசியில் நிறுவுவதற்கு அதன் மீது இரண்டு முறை கிளிக் செய்யவும்..

இந்த முயற்சிக்கு ஆதரவளித்தல்