சேப்டிராக்கைப் பற்றி எப்படி பயன்படுத்துவது? பதிவு செய்தல் கேள்வி பதில் ஆய்வுகள்

சேப்டிராக்கைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நீங்கள் சேப்டிராக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கு பார்ப்பீர்கள். உங்களுக்கு வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களை contact_safetrac@kritilabs.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ள மறக்காதீர்கள்!
சேப்டிராக் உங்களது பயணத்தை எப்படி பாதுகாப்பானதாக்கும்?
உங்களது கைப்பேசியில் சேப்டிராக் பயன்பாட்டு மென்பொருளை நீங்கள் பயன்படுத்த ஆரம்பித்த உடனேயே, அதனை சர்வர் மூலமாக தொடர்ச்சியாக தொடர்வதற்கு மற்றும் கண்காணிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால், எந்த ஒரு நேரத்திலும் நீங்கள் இருக்கும் பகுதி மிகவும் தெளிவாகத் தெரியும். ஏதேனும் அவசரக்காலத்தில், இந்த மென்பொருளில் உள்ள “அவசரக்காலம்” என்ற விசையை அழுத்துவதன் மூலம், நீங்கள் பதிவு செய்துள்ள அவசரக்கால தொடர்பு எண்களுக்கு குறுந்தகவல் மற்றும் ‌மின்னஞ்சல் அனுப்பப்படும். நீங்கள் இருக்கும் இடம் ஏற்கனவே தெரியும் என்பதால், உடனடியாக உங்களுக்கு உதவி வரலாம்.

சேப்டிராக் எப்படி செயல்படுகிறது?
உங்களது கைபேசியில் நிறுவப்பட்டுள்ள சேப்டிராக் பயன்பாட்டு மென்பொருள் நீங்கள் இருக்கும் இடம் பற்றிய தகவலை தொடர்ந்து சர்வருக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். அந்த இருப்பிடம் குறித்த தகவலுடன், உங்களது முழு பயணமும் ஒரு வரைபடத்தில் காண்பிக்கப்பட்டு அதில் நீங்கள் இருக்கும் இடம் மிகவும் துல்லியமாக காண்பிக்கப்படும். அவசர ‌சூழ்நிலையில், அவசரக்கால விசை அழுத்தப்பட்டவுடன், அவசரக்காலத்தில் தொடர்பு கொள்வதற்கு நீங்கள் பதிவு செய்துள்ள எண்ணுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

சேப்டிராக் மென்பொருளை நிறுவி இந்த சேவையைப் பயன்படுத்த எவ்வளவு செலவாகும்?
க்ருதிலேப்ஸ் தனது சமுதாய சேவை அறக்கட்டளையான லோக்காலெக்ஸ் (www.lokalex.com) மூலமாக ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக ஒரு சமுதாய ‌சேவை முயற்சியாக உருவாக்கியுள்ளது. இந்த சேவை முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதனால், சேப்டிராக் சேவையை நிறுவி அதனைப் பயன்படுத்துவதில் எந்தவிதமான செலவும் இல்லை.

சேப்டிராக் அனைத்து கைபேசிகளிலும் செயல்படுமா?
சேப்டிராக்கின் தற்போதைய பதிப்பு ஆன்டிராய்டு கைபேசிகளிலும் மேலும் ஜாவா மென்பொருளை செயல்பட வைக்கும் அனைத்து கைபேசிகளிலும் செயல்படும். சேப்டிராக் நீங்கள் இருக்கும் இடத்தை சர்வருடன் தொடர்பு கொண்டு தெரிவிக்க ஏதுவாக உங்களது கைபேசியில் இணையதளத்துடன் தொடர்பு கொள்ளும் வசதியிருக்க வேண்டும். இந்த பயன்பாட்டு மென்பொருளை மற்ற தளங்களுக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்ற தளங்களில் இதைச் செயல்பட வைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் உங்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருப்போம்.

சேப்டிராக் எல்லா புவியியல் பகுதிகளிலும் செயல்படுமா?
தற்போது இந்த சேவை இந்தியாவிற்குள் மட்டுமே செயல்படுகிறது.

ஒரே பயனீட்டாளர் குறியீட்டிற்கு பல கைபேசி இணைப்புகள் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதா?
இல்லை. சேப்டிராக்கின் முதன்மையான பணி அவசரக்காலத்தில் ஒரு தனிநபரை பாதுகாப்பாக கண்காணித்து அவரைப் பின்தொடர்வதாகும். அதனால் தற்போது, சேப்டிராக் பயன்பாட்டு மென்பொருள் நிறுவப்பட்ட ஒரு கைபேசி மட்டுமே ஒரு பயனீட்டாளர் குறியீட்டின் மூலம் கண்காணிக்க முடியும்.

நான் போகும் இடங்களை எந்த நேரத்திலும் கண்காணிக்க முடியுமா? அது எனது தனிமையை பாதிக்குமா?
இல்லை. நீங்கள் இந்த பயன்பாட்டு மென்பொருளை செயல்பட வைத்தீர்கள் என்றால் தான் நீங்கள் போகும் இடங்கள் சேப்டிராக்கினால் கண்காணிக்கப்படும். நீங்கள் ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்தால், நீங்கள் சேப்டிராக்கினைப் பயன்படுத்த மாட்டீர்கள், அதனால் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது கண்காணிக்கப்பட மாட்டாது. ஆனால் நீங்கள் இரவில் பயணம் செய்கிறீர்கள் அல்லது பாதுகாப்பற்றது போல் உணர்கிறீர்கள் என்றால், சேப்டிராக்கினை செயல்படுத்தி பாதுகாப்பாக உணர்வது சிறந்ததாகும்.

எனது கைபேசியில் இந்த பயன்பாட்டு மென்பொருளை மறுபடியும் நிறுவுவதற்கு நான் மறுபடியும் பதிவு செய்து கொள்ள வேண்டுமா?
இல்லை. நீங்கள் சர்வருக்குள் நுழையும் போது, நீங்கள் தளவிறக்கம் செய்வதற்கான ஒரு தொடர்பு இருக்கும். அந்த தொடர்பில் நீங்கள் கிளிக் செய்தீர்கள் என்றால், இந்த பயன்பாட்டு மென்பொருளுக்கான இணையத் தொடர்புடைய ஒரு மின்னஞ்சல் நீங்கள் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவாரிக்கு அனுப்பப்படும்.

நிறுவுவதற்கான இந்த இணையத்தொடர்பை பல கைப்பேசிகளில் பயன்படுத்த முடியுமா?
இல்லை. ஒவ்வொரு பயன்பாடும் தனித்தன்மை வாய்ந்தது மேலும் நீங்கள் பதிவு செய்யும் போது குறிப்பிட்ட கைபேசி எண்ணுக்கு மட்டுமே அது பொருந்தும். ஒரே இணையத் தொடர்பினைப் பயன்படுத்தி நீங்கள் இந்த பயன்பாட்டு மென்பொருளை பல கைபேசிக் கருவிகளில் நிறுவினால் இந்த மென்பொருள் சரியாக செயல்புரியாது.

இதன் அவசரக்கால அம்சம் எப்படி செயல்படும்?
நீங்கள் அவசரக்கால விசையை அழுத்தியவுடன், நீங்கள் பதிவு செய்துள்ள அவசரக்கால கைபேசி எண்ணுக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், நீங்கள் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு அவசரக்கால மின்னஞ்சல் அனுப்பப்படும். இந்த செர்வரால் நீங்கள் இருக்கும் இடத்தை உடனடியாக கண்டு பிடித்துவிடலாம் மேலும் மக்கள் உதவி செய்ய உடனடியாக வருவார்கள். இந்த அம்சத்தில் பல்வேறு மக்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வர வாய்ப்புள்ளது என்பதால், அவசரக்காலத்தில் அல்லது நீங்கள் பாதுகாப்பின்றி உணரும் போது மட்டும் இதைப் பயன்படுத்தும்படி நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

எனது தொடர்பு மற்றும் அவசரக்கால தொடர்புத் தகவல்கள் மாறிவிட்டால், இந்த புதிய தகவல்களை நான் எப்படி சேப்டிராக்கில் மாற்றுவது?
நீங்கள் சேப்டிராக்கிற்குள் நுழைந்த பின்னர் நீங்கள் ‘மை ப்ரோபைல்' என்ற இணைப்பைப் பயன்படுத்தி உங்களைத் தொடர்பு கொள்வதற்கான தகவல்களை மாற்றியமைக்கலாம். உங்களது சேப்டிராக் பயனீட்டாளர் குறியீடு மற்றும் உங்களது கைபேசி எண் ஆகியவற்றை மாற்ற முடியாது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த முயற்சிக்கு ஆதரவளித்தல்